கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் செல்லும் மெயின் ரோடு நெல்லூர் பிரிவு பாதையிலிருந்து எடவனஅள்ளி வரை உள்ள 4 கி.மீ. தூரம் உள்ள தார்சாலை முழுதுவம் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நகர பஸ், பள்ளி வாகனம், இருசக்க வாகனங்கள் தினமும் வந்து செல்கிறது இதனால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த தார்சாலையை புதுப்பிக்க பல முறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே இந்த சாலையை புதுப்பித்து தருமாறு கோரிக்கை.
-ரஜினி, எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.