சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவைகள் சாலையை மறைத்து நிற்பதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்திலும் முட்செடிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.