நாகர்கோவில் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் வரை உள்ள சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் திட்ட பணிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் முழுமையாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லச் செல்ல சாலை முழுவதும் சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
-முகேஷ், கோட்டார்.