தஞ்சை-திருச்சி செல்லும் சாலையில் செங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?