தஞ்சை ஜெபமைாலைபுரத்தில் இருந்து பிருந்தாவனம் நாலுரோடு வரையிலான சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமான சாலையாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?