பெங்களூரு பெல்லந்தூர் முனிரெட்டி லே-அவுட்டில் உள்ள சாலைகள் கடந்த சில தினங்களாக குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.