சேதமடைந்த சாலை

Update: 2022-09-07 16:27 GMT

ஓசூர் என்.ஜி.காலனியின் பின்புறமுள்ள குறிஞ்சி நகர விரிவாக்க பகுதி 2-வது குறுக்குத்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பகுதியில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை மிகவும் சேதமடைந்தும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-சையத் அன்சர், குறிஞ்சி நகர், ஓசூர்

மேலும் செய்திகள்