விபத்து அபாயம்

Update: 2022-09-07 09:09 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டூா்ணிமடத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை எப்போது வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் ஒரு தனியார் பள்ளியின் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், சர்ச்தெரு, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்