தஞ்சை மாவட்டம் பசுபதி கோவில் ஊராட்சி கீழத்தெருவில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக பல்லாங்குழி போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?