குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-05 16:27 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தார் சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்