தஞ்சை-கும்பகோணம் பஸ் வழித்தடத்தில் வயலூர்-ராமாபுரம் சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?