ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதி, 100 அடி சாலையில், முனீஸ்வர் நகர் செல்லும் பகுதி வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-சிவகுமார், ஓசூர்.