சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.