வேகத்தடை அவசியம்

Update: 2022-09-03 16:36 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பட்டி வரை உள்ள சுமார் 10 கிலோமீட்டர் தூர சாலையில் பட்டணம், அய்யம்பாளையம், வடுகம், பனங்காடு உள்பட முக்கிய பகுதிகளில் சாலைகள் மிகவும் வளைவாக உள்ளது. இந்த சாலை அதிக போக்குவரத்து கொண்டதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பஸ், கார் போன்ற வாகனங்களும் குறுகிய வளைவில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே விபத்து ஏற்படாமல் இருக்க பட்டணம் கிராமத்தில் இருந்து புதுப்பட்டி வரை உள்ள சாலையில் குறுகிய வளைவில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். வளைவான பகுதியில் வளைவு உள்ளதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கநாதன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்