ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாந்திநகர் மேற்கு ரிங்ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அல்லல்படுகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாகராஜ், ஓசூர்.