குண்டும், குழியுமாக மாறிய சாலை

Update: 2022-09-03 13:35 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து கண்ணூர்பட்டி மற்றும் திருமலைப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அதன் காரணமாக அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்