குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-03 10:47 GMT

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பழைய சினிமா கொட்டாய் குருவாளியூர் செல்லும் தார் சாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சேதமடைந்த சாலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

மேலும் செய்திகள்