நாமக்கல்-மோகனூர் சாலையில் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று வயர்கள் பதிக்க சாலையோரமாக குழி தோண்டி உள்ளது. இந்த குழிகள் இதுவரை மூடப்படாமல் அப்படியே உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அபாயகரமான இந்த குழியால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.