கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாகலூர் ரோடு சர்க்கிள், ஏ.வி.ஆர். நகைக்கடை பகுதி, பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், ஓசூர், கிருஷ்ணகிரி.