தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதி அம்மங்குடிஅருகே சின்னஅம்மங்குடி ஆற்றங்கரை பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?