நாமக்கல் பஸ்நிலையம், நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்நிலையத்திற்குள் டவுன் பஸ்கள் நுழையும் இடத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு ஓரிரு இடங்களில் குழிகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர், எனவே பஸ் நிலைய நுழைவு வாயிலில் உள்ள குழிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.