சேலம் குரங்குச்சாவடி சாலை பகுதி என்பது சேலம்- பெங்களூர் வழியாக செல்லும் சாலையாகும். புதிய பஸ் நிலையம் செல்ல மிக முக்கிய சாலையாக அமைந்துள்ளது. அந்த பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக காய்கறி சந்தை ஒன்று அமைந்துள்ளது. வாரம் 2 நாட்கள் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொது மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகமான வாகனங்கள் செல்லும் பகுதி என்பதால் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.