கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அன்னை நகர் விரிவாக்க சாலை தற்போது பெய்த மழையால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அன்னை நகர் விரிவாக்க சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.