தேனி கே.ஆர்.ஆர். நகர், என்.ஆர்.டி.நகர், சமதர்மபுரம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற இடங்களில் வேகத்தடைகள் இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கு வெள்ளை நிற கோடுகள் வரைய வேண்டும். ஆனால் இப்பகுதிகளில் வெள்ளை நிறக் கோடுகள் எதுவும் வரையப்படாததால் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பகுதிகளில் போதிய விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.