சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-01 13:06 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி பெரும்பாண்டி மாதா கோவில் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்