தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. அவற்றில் ஆயிரகணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?