குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-31 16:52 GMT

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் பிரம்மமலைக்கு செல்லும் வழியில் குடியிருப்பு பகுதிகளும், கடைகள், சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன. பவுர்ணமி நாளன்று ஏராளமான பக்தர்கள் பிரம்ம மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ராயக்கோட்டை ரோட்டில் இருந்து பிரம்மமலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜா, ஸ்ரீராம்நகர், ஓசூர்.

மேலும் செய்திகள்