சேதமடைந்த சாலை

Update: 2022-08-31 16:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி பாலக்கோடு மெயின்ரோட்டை ஒட்டியுள்ள ரகமத் காலனியில் 3 தெருக்களிலும் சிமெண்டு சாலை உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த தெருவில் உள்ள சாலைகள் முழுவதும் பெயர்ந்துள்ளது. இதனால் அந்த தெருக்களில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருசப்பன், ரகமத்காலனி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்