நாமக்கல்லில் டவுன் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழையும் இடத்தில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. விபத்தை தவிர்க்க பழுதடைந்து இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்.