கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் எலத்தகிரி சாலை மிகவும் சேதமடைந்து பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-பாபு, கிருஷ்ணகிரி.