நாமக்கல் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்டது எழில்நகர். இப்பகுதியில் மொத்தம் 9 வீதிகள் உள்ளன. இந்த 9 வீதிகளிலும் சமீபத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் 3-வது வீதியில் மட்டும் சாலை பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மழைகாலங்களில் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் கொசு உற்பத்தி ஆகும் அபாயம் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.