மதுரை மாவட்டம் நரிமேடு பிரதான சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.