குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-28 15:59 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலை அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் அருகே ஹவுசிங் போர்டு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜ்மல், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்