அலட்சியம் கூடாது

Update: 2022-03-21 13:45 GMT
சென்னை வியாசர்பாடி 2-வது பள்ள தெருவில் மழை நீர் வடிகால் பணி தொடக்கத்தில் சில நாட்கள் விரைவாக நடை பெற்று வந்த நிலையில், தற்போது மந்தமாய் ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. இந்த தெருவில் 2 பள்ளிகள் இருப்பதால் பள்ளிக்கு, சைக்கிளில் மற்றும் நடந்து செல்லும் குழந்தைகள் ஏராளம். கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்