சென்னை கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை வெற்றி நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறத்தில் சாலை பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முழுவதும் முடிவடையாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இரவில் இப்பகுதியை கடந்து செல்லும் முதியோர் மற்றும் பெண்கள் கவனக்குறைவினால் கீழே விழுந்து அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு மெற்கொண்டு பாதியில் நிறுத்தபட்ட சாலை பணியை முழுவதுமாக முடிக்க உத்தரவிட வேண்டும்.