சென்னை மணலி புதுநகர் அருகில் உள்ளது நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றுப்பாலம். இது சென்னை-மீஞ்சூர், பொன்னேரி, எண்ணூர், காமராஜர் துறைமுகம் என முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலமாகும். நாள்தோறும் ஆயிரம் கணக்கான கனரக கன்டெயினர் வாகனங்கள் செல்லும் இந்த பாலத்தின் தரை பகுதி, சுற்றுசுவர் தடுப்பு பகுதி விரிசல் விட்டு காணப்படுகிறது. விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.