சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் இருந்து மஞ்சம்பாக்கம் செல்லும் சர்வீஸ் சாலையில் மின் வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் முறையாக மூடப்படாததால் இரவு நேரங்களில் இருள் சூழந்த அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடக்கும்போது சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.