ஓசூர் அருகே கர்னூரில் இருந்து ஆனேக்கல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிராஜ், ஓசூர்.