மதுரை மாநகராட்சி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு 84-வது வார்டு சித்தர் தெருவில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சாலையும் மண் சாலையாக உள்ளதால் வாகனஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.