சீரமைக்கப்பட வேண்டிய சாலை

Update: 2022-08-26 16:12 GMT

ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிளில் பேரிகை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. பாகலூரின் பிரதான பகுதியில் உள்ள இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட வேண்டும்.

-பாலகிருஷ்ணன், பாகலூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்