நாமக்கல் மாவட்டம் கலங்காணியில் இருந்து பாலமுருகன் நகர் வழியாக காளப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் சூழல் உருவாகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.