சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்புறம் உள்ள குடியிருப்பில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் பிரதான தெருவில் சாலை சேதமடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் இப்பகுதியை கடந்து செல்வோர் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.