தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளியில், ஏரியூர்- மேச்சேரி பிரதான சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீரில் தத்தளித்து செல்லும் வாகனங்கள் நீரை பீய்ச்சி அடித்தபடி செல்கின்றன. இந்த தண்ணீர் சாலையோரம் நடந்து செல்வோர், குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மீது படுவதால் கடு்ம் சிரமம் அடைகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-பூபாலன், ஏரியூர், தர்மபுரி.