ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2022-08-24 14:46 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரம் வழியாக ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் பிரிந்து ஜக்கசமுத்திரம் வழியாக ஒட்டுப்பட்டி, பில்லிபோயன்கொட்டாய், ஜ.பந்தார‌அள்ளி, பெரிய கோடிகான அள்ளி, நடுகுட்லான‌அள்ளி, சி.எம்.புதூர் வழியே மாரண்ட‌அள்ளியை சென்றடையும் சாலையாகும். மேலும் மாரண்ட‌அள்ளியில் இருந்து தர்மபுரி நெடுஞ்சாலையை இணைக்கிறது. இந்தசாலை புதுப்பிக்கட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் சாலை மிகவும் மோசமாக காணப்படுவதால் பள்ளி மாணவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் சிறு சிறு விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படும் அந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், ஜக்கசமுத்திரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்