நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து குளக்கரை தெரு வழியாக பரமத்தி ரோட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. அதை தவிர்க்க விரைவில் சாலையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.