நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாரைக்கிணறு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலைையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.