தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செல்லியம்பட்டி ஊராட்சி கூடக்காரன்கொட்டாய் கிராம பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் முதல் முத்துமாரியம்மன் கோவில் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற பல முறை கோரிக்கை விடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், தர்மபுரி.