குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-08-22 15:38 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மதுக்கூர் சாலையில் இருந்து உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கடைத்தெரு வரை செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?







மேலும் செய்திகள்