அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு மருத்துவமனை அருகில் ஏரி உள்ளது. இந்து ஏரியை சுற்றிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உடற்பயிற்சி பூங்கா அமைத்தால் இப்பகுதி இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.