சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல்,சறுக்கல், ராட்டினம் போன்றவை சேதமடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது. இதனால் இங்கு விளையாட வரும் சிறுவர்கள் அவதியடைகின்றனர். சிறுவர்கள் நலன் கருதி பூங்காவில் சேதமடைந்த உபகரணங்களை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.